TNPSC South Indian History | Study Materials
விஜயநகர் பாமினி அரசுகள்
விஜய நகரப் பேரரசு
சான்றுகள்
- இந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நான்கு மரபுகள் – சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு – கி.பி. 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சிபுரிந்தன. இலக்கியம், தொல்லியல், நாணயம் என விஜய நகர வரலாற்றுக்கான சான்றுகள் பல்வகைப்படும்.
- கிருஷ்ண தேவராயின் ஆமுக்த மால்யதம், கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகர சமகால நூல்களாகும்.விஜய நகரப் பேரரசுக்கு பல்வேறு அயல்நாட்டு பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களது குறிப்புகளும் பயனுள்ள சான்றுகளாகும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபன் பதூதா, வெனிஷியப் பயணி நிக்கோலோ டி கோன்டி, பாரசீகப்பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் போன்ற பயணிகள் விஜய நகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர். இரண்டாம் தேவராயரின், ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப் படுத்துகின்றன.
- அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக் கூறுகின்றன.
அரசியல் வரலாறு
- சங்கம மரபைச் சேர்ந்த ஹரிஹரரும் புக்கரும் 1336 ஆம் ஆண்டு விஜய நகரத்தை நிறுவினர். ஏற்கனவே, அவர்கள் வாரங்கல் ஆட்சியாளர்களான காகதீயர்களிடம் பணியாற்றிவந்தனர். பிறகு காம்பிலிக்கு சென்றனர். அங்கு முஸ்லிம் படையெடுப்பாளர்களால் சிறைப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.
- பின்னர், வித்யாரண்யர் என்பவரின் முயற்சியால் இந்து சமயத்திற்கு திரும்பினர். தங்களது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்ட அவர்கள் துங்கப்பத்திரை நதியின் தென்கரையில் ஒரு புதிய நகரத்தை நிறுவினர். வெற்றி நகரம் என்ற பொருள்கொண்ட விஜயநகரம் என்று அது வழங்கப்பட்டது.
- ஹோய்சள அரசின் வீழ்ச்சி, ஹரிஹரரும் புக்கரும் தங்களது அரசை விரிவுபடுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை எளிதாக்கியது.
- 1346 ஆம் ஆண்டு வாக்கில் ஹோய்சள அரசுப்பகுதி முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் வந்தது. விஜயநகரத்திற்கும் மதுரை சுல்தானியத்திற்கும் இடையிலான பூசல் நாற்பதாண்டு காலம் நீடித்தது.
- குமார காம்பணரின் மதுரைப்படையெடுப்பு குறித்து மதுராவிஜயம் என்ற நூலில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. அவர் மதுரை சுல்தானியத்தை அழித்தார். இதனால், விஜய நகரப் பேரரசு ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதையும் உள்ளடக்கியதாக விரிவடைந்தது.
- விஜயநகர பேரரசுக்கும் பாமினி அரசுக்கும் இடையிலான பூசலும் பல ஆண்டுகள் நீடித்தன.
- கிருஷ்ணா, துங்கபத்திரா நதிகளுக்கிடையிலான பகுதியான ரெய்ச்சூர் தோஆப் பகுதியை கட்டுப்படுத்துவதும், கிருஷ்ணா கோதாவரி டெல்டாவின் வளமான நிலங்களைக் கைப்பற்றுவதும் இம்மோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன.
- சங்கம மரபின் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர். ஆனால், அவரால்கூட பாமினி சுல்தான்களை முழுவதுமாக வெற்றிகொள்ள இயலவில்லை. அவரது மறைவுக்குப்பிறகு சங்கம் மரபு வலிமையிழந்தது.
- அடுத்ததாக, சாளுவநரசிம்மர் சாளுவ மரபைத் தோற்றுவித்தார். இந்த மரபு மிகவும் குறுகிய காலமே (1486 – 1509) ஆட்சியிலிருந்தது.
Vijayanagara and Bamini Empires – Empires – Maurya Empire, Kushan Empire, Gupta Empire, Harshab Empire, South Indian States, Mahendravarman, Chola Perara, Rajaraja Chola, Pandyan Empire, Vijayanagara Empire, Mughal Empire
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |