TNPSC Key Elements of the Constitution | Study Materials
அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
எழுதப்பட்ட ஓர் அரசியல் சட்டம்
- இந்திய அரசியல் சட்டம், முக்கியமாக ஓர் எழுத்துப்ப10ர்வமான அரசியல் சட்டமாகும். எழுதப்பட்ட ஓர் அரசியல் சட்டம் என்பது, கொடுக்கப்பட்ட ஒரு கால அவகாசத்தில் எழுதப்படுவது. நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நாளின் போது நடைமுறைக்கு வருகிறது அல்லது ஒர் ஆவணமென்கிற வகையில் சுவீகரிக்கப்படுகிறது. நமது அரசியல் சட்டம், இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் வடிவமைக்கப்பட்டது. 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் நாளன்று ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது.
- பிரிட்டிஷ் அரசியல் சட்டம், எழுதப்படாத ஓர் அரசியல் சட்டத்திற்கு எடுத்துக் காட்டாகும். உலகிலேயே மிக நீளமான அரசியல் சட்டம், இந்திய அரசயில் சட்டம் தான். உண்மையான மூல அரசியல் சட்டம் 395 பிரிவுகளையும், 8 அட்டவணைகளையும் கொண்டது. அதே சமயம் அமெரிக்க அரசியல் சட்டம் 7 பிரிவுகளை மட்டுமே உடையது.
இறுக்கமானதும், நெகிழ்வானதும் ஒன்றிணைந்தது
- ஓர் அரசியல் சட்டத்தை இறுக்கமானது அல்லது நெகிழ்வுத் தன்மையுடையது என்று அழைப்பது அதனுடைய திருத்த நடைமுறையின் அடிப்படையிலேயே. ஓர் இறுக்கமான அரசியல் சட்டத்தில், அந்த அரசியல் சட்டத்தைத் திருத்துவது அவ்வளவு எளிதல்ல. ஐக்கிய அமெரிக்க நாடுகள் (யு.எஸ்.ஏ), ஸ்விட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் இறுக்கமானவை என்று கருதப்படுகின்றன.
- அதே சமயம், பிரிட்டிஷ் அரசியல் சட்டம் நெகிழ்வுத் தன்மை உடையது என்று கருதப்படுவதற்குக் காரணம். திருத்தம் செய்வதற்கான நடைமுறை எளிதாகவும், சுலபமானதாகவும் உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை, திருத்தத்தின் இயல்பைப் பொறுத்து மிக சுலபமானது முதல் மிக அதிகபட்ச சிரமமான ஒழுங்குமுறை வரையில் பல்வேறு வகையான திருத்தங்களை வழங்குகிறது.
Key Elements of the Constitution – Introduction – The Importance of Introduction, Part of the Constitution – Prologue, Prologue and Legislation, Characteristics of the Indian Constitution, Special Characteristics of the Indian Constitution – Principles of Government,A written political law, parliamentary democracy.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |