TNPSC Indian Constitution Preamble Study Materials
இந்திய அரசியலமைப்பின் முகவுரை
- முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.
- முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது.
- இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும்.
- இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது.
- அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது.
முகப்புரை
- இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்
- சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்,
- சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்,
- தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும்,
- உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு,
- 1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில்,ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள்
- Sovereign – இறையாண்மை – முழவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
- Socialist – சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- Secular – மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)
- Democratic – மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
- Justice – நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி
- Liberty – உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு
- Equality – சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில்
- Fraternity – சகோததரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.
Indian Constitution Preamble – Introduction – Importance of the Constitution, Part of the Constitution – Prologue, Introduction and Legislation, Characteristics of the Constitution of India
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |