TNPSC Forest And Wildlife Geography Study Materials
காடு மற்றும் வன உயிரினங்கள் – காடுகள் – வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் , வெப்பமண்டல பருவக்காற்று காடுகள் , குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள் , பாலைவனத் தாவரம , மாங்ரோவ் காடுகள் (சதுப்பு நிலக் காடுகள்) , மலைக்காடுகள் , வன உயிரினங்கள்
காடுகள்
- மனித இனத்திற்கு கிடைக்கக் கூடிய சிறந்த இயற்கை வளங்களுள் காடுகளும் ஒன்றாகும்
- இந்தியாவில் காடுகளின் மொத்த பரப்பளவு சுமார் 68 மில்லியன் ஹெக்டேர் ஆகும்
- இந்திய இயற்கைத் தாவரங்கள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
- வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள்
- வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
- குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள்
-
பாலைவனத் தாவரம
-
மாங்ரோவ் காடுகள் (சதுப்பு நிலக்காடுகள்)
- மலைக்காடுகள்
1.வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்
- ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீக்கும் அதிகமான இடங்களில் பசுமைமாறாக் காடுகள் காணப்படுகின்றன
- மிக அடர்த்தியாக காணப்படுவதுடன் 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களைக் கொண்டது
- ரோஸ் மரம்,எபானி,மகோகனி, இரப்பர்,சின்கோனா, மூங்கில்,லயனாஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன
- பசுமை மாறாக்காடுகள் பெரும்பாலும் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும், மலையின் தாழ்ந்த சரிவுகளிலும், அஸ்ஸாம், ஒடிசாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன
2.வெப்பமண்டல பருவக்காற்று காடுகள்
- 70 செ.மீ முதல் 200 செ.மீ வரை ஆண்டு சராசரி மழை பெறும் பகுதிகளில் வெப்ப மண்டல பருவகாற்று காடுகள் காணப்படுகின்றன
- இக் காடுகளில் உள்ள மரங்கள் வசந்த காலத்திலும், கோடைக்காலத்தின் முற்பகுதியிலும் சுமார் 6 முதல் 8 வாரங்களுக்குள் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன.எனவே இக்காடுகள் இலையுதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன
- தேக்கு, சால், சிசம், சந்தன மரம்,வேட்டில், வேப்ப மரம் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன
- ஈரமான பருவக்காற்று காடுகள் வடகிழக்கு மாநிலங்களிலும், இமய மலையின் அடிவாரங்களிலும், ஜார்கண்ட், மேற்கு ஒடிசா, சட்டீஸ்கர், மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன
- வறண்ட பருவக்காற்று காடுகள் தீபகற்ப பீடபூமியிலும், பீகார் ,உத்தரப் பிரதேசத்தின் சமவெளி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன
3.குறுங்காடு மற்றும் முட்புதர்கள்
- 75 செ.மீக்கும் குறைவான சராசரி மழை அளவு டன் நீண்ட வறட்சியான பருவம் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன
- நிலத்தடியில் வெகு ஆழத்தில் உள்ள நீரை உறிஞ்சக்கூடிய நீண்ட வேர்களைக் கொண்ட மரங்கள் இங்கு காணப்படுகின்றன
- நீர் ஆவியாதலை குறைப்பதற்கு அடர்ந்த, சிறிய இலைகளை இம்மரங்கள் கொண்டுள்ளன
- அக்கேசியா, பனை,கள்ளி, கயிர்,பாபூல்,பலாஸ்,கக்ரி,கஜீரி போன்ற மரங்கள் காணப்படுகின்றன
- வடமேற்கு பகுதியிலுள்ளஅரை பாலைவன பகுதிகளான குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், தென்மேற்கு பஞ்சாப், மேற்கு ஹரியானா,மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பகுதிகளான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன
Forest and Wildlife – Forests – Tropical evergreen forests, tropical monsoon forests, shrubs and barren forests, desert flora, mangrove forests (swamp forests), mountain ranges, wildlife
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |